Wednesday, December 20, 2017

டில்சான் தலைமையில் தில்லையடியில் UNP !


தில்லையடி ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளரும், நீண்ட கால ஐக்கிய தேசிய கட்சி போராளியுமான ஜனாப் டில்சான் புத்தளம் நகர சபை தேர்தலுக்காக தில்லையடி 11ம் வட்டாரத்தில் களம் இறங்க உள்ளார்.

தற்பொழுது புத்தளம் நகர சபைக்கான UNP வேட்பாளர்கள் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

UNP Team for Puttalam UC - 2018

01. Y.M.Nisthar (ACMC)
02. S.R.M.M.Muhsi
03. A.O. Alikhan
04. Ali Sabri Raheem (ACMC)
05. M.M.Murshid (ACMC)
06. R.M.Faroos
07. M.N.M.Nusky
08. Uthitha Rathnayake
09. Mrs.Sunil
10. Suthu Malli
11. J.Dilshan








Monday, December 18, 2017

தில்லையடி SLFP வேட்பாளராக ஜப்ரின் ஹனீபா நியமனம்!

தில்லையடியில் SLFP யின் தீவிர ஆதரவாளராகும், முன்னால் நகர சபை உருப்பினருமான சதுர்தீன் அவர்களின் விசேட பரிந்துரையின் பேரில் ஜப்ரின் ஹனீபா தில்லையடி 11 ம் வட்டாரத்தில் களம் இறங்குகிறார்..

தில்லையடி சார்பாகவும், பிரதான வேட்பாளராகும் களமிரங்க இருந்த சதுர்தீன் சில சட்ட சிக்கல் காரணமாக வேட்பாளராக முடியாமல் போயிருந்தார்.

இந்நிலையிலே, ஜப்ரின் தெரிவு செய்யபட்டுள்ளார்.. சிறந்த அறிவிப்பாளரும், பல மேடைகளில் பேசி, பேச்சுத்திறமையும் கொண்ட இவர் இத்தேர்தலில் வெற்றி பெருவரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்..
தகவல் - ஆசாத்




பாலர் பாடசாலை நிகழ்வில் ஜனாப் டில்சான் விசேட அதிதி..!!

தாஹிப் நகர், ஓஸ்மானியா பலர் பாடசாலையின் சிறுவர் தின நிகழ்வில் தில்லையடி ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளர் டில்சன் விசேட அதிதியாக கலந்து சிறப்பித்தார்..

வருடாந்தம் நடக்கும் இந்நிகழ்வில் டில்சான் உரையாற்றுகையில் ஒரு ஊரின் எழுச்சியில் கல்வி பாரிய பங்கு வகிக்கின்றது. தமது பிள்ளைகளின் கல்விக்காக பெற்றோர்கள் தமது நேரங்ககளை தியாகம் செய்ய வேண்டும் எனவும். 

தில்லயடிக்கான  தனது பத்து வருட அபிவிருத்தி திட்டத்தில் பாலர் பாடசாலையையும் உள்வாங்குவதாக கூறினார்.

தகவல் - நஷ்ஹத்














Sunday, December 17, 2017

தில்லையடியில் நகுலன் தலைமையில் ACMC களத்தில்..!

தில்லையடியின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அமைப்பாளரும் சன் ரைஸ் விளையாட்டு கழகத்தின் தலைவருமான திரு. நகுலன் தலைமையில் பாடசாலை மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகளும், பாடசாலை உபகரணங்களும்  அன்பளிப்பு செய்யப்பட்டது.

தொடர்ச்சியாக மூன்றாவது வருடமும் நடைபெறும் இந்நிகழ்வில் பலரும் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

அத்தோடு இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக புத்தளம் மாவட்டத்திற்கான பாராளமன்ற உறுப்பினர் நவவி ஹாஜியார் அவர்களும், மற்றும் அகில இலங்கை மக்கள் காங்ரஷின் புத்தளம் மாவட்ட அமைப்பாளர் அலிசப்ரி அவர்களும்,அத்தோடு சிறப்பு அதிதியாக புத்தளம் நகரசபையின் AO சபீக் சேர் அவர்களும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

தில்லையடி பிரதேசத்தில் பல சமூக விடயங்களின் ஆர்வம் காட்டிவரும் நகுலன், தனது சன் ரரைஸ் கழகம் உட்பட பல இளைஞர் அமைப்புகளுடன் இணைந்து பல வேலைத்திட்டங்களை செய்வது குறிப்பிடத்தக்கது.
மேலும் தனது உரையில் தில்லையடியில் கல்வி, விளையாட்டு தொடர்பான அபிவிருத்திகளை தொடர்ந்து மேட்கொள்ள இருப்பதாகவும்.  தனது சேவைகளை மேற்கொள்ள உதவிய அணைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றியை தெரிவித்து கொண்டார்..