Monday, June 15, 2015

நூலகத்திற்கு அடிக்கல் நாட்டுவிழா.

நூலகத்திற்கு அடிக்கல் நாட்டுவிழா.

தில்லையடி முஸ்லிம் மஹா வித்தியாலத்தில் 15/6/2015 இன்று திங்கட்கிழமை பாடசாலை அதிபர் தலைமையில் நூலகத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

கல்வி, விளையாட்டு மற்றும் சகல துறைகளிலும் வளர்ந்து வரும் தில்லையடி முஸ்லிம் மகா வித்யாலயத்தின் மிக பெரிய பற்றாகுறையாக இருந்தது நூலகதிற்கு ஒரு தனி கட்டிடம் இல்லாமையாக இருந்தது ஆகும். இப்போது வல்ல இறைவனின் அருளால் இந்த குறை இல்லாமல் போவதற்கான சந்தர்பம் கிட்டியுள்ளது.

Thillayadi M.M.V . Photo by Mafas Deen
சுமார் 60 அடி நீளமுள்ள நூலகம் அமைப்பதற்காக இன்று அடிகள் நாட்டப்பட்டது . இதில் கௌரவ அதிதிகளாக புத்தளம் வலய கல்வி பணிப்பாளர்  Mr . M.P.S.K. விஜயசிங்க, Mr . J.M. சுரைஸ் (அறிவிருட்சக பணிப்பாளர்), Mrs. ரிசானா அப்துல் ரஹீம் (முல்லை ரிசானா), Mr. R.M.J.A.ஜின்னாஹ் (D.D.E.- Planning), Mr. Z.A.சன்ஹிர் (D.D.E.- Tamil Unit), Mr. A.C.M. மஹ்ரூப் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் இதில் ஆசிரியர்கள், S.D.S. , பழைய மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் நலன் விரும்பிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
Thillayadi M.M.V . Photo by Mafas Deen


Thillayadi M.M.V . Photo by Mafas Deen

Thillayadi M.M.V . Photo by Mafas Deen

Thillayadi M.M.V . Photo by Mafas Deen

Thillayadi M.M.V . Photo by Mafas Deen

Thillayadi M.M.V . Photo by Mafas Deen

Thillayadi M.M.V . Photo by Mafas Deen

Thillayadi M.M.V . Photo by Mafas Deen

Friday, February 20, 2015

உயர்தர பரீட்சைக்கு விண்ணப்பம் கோரல்.

இலங்கை பரீட்சை திணைக்களம் 2015 ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள உயர் தர பரீட்சைக்கு விண்ணபங்களை கோரியுள்ளது. விண்ணப்பங்கள் யாவும் பாடசாலை அதிபர் ஊடாகவும் மார்ச் 6 திகதிக்கு முன் அனுப்பப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

* March 6 க்கு பின் கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

*தனியார் மாணவர்கள் இந்த முகவரியை பயன்படுத்தவும்..

Exam Commissionaire General
P.O Box 1503
Colombo
Webssite-  http://www.doenets.lk/exam/index.jsf


Tuesday, February 17, 2015

14 ஏகர் நிலப்பரப்பை தில்லையடி பாடசாலை அதிபர் பொறுப்பெடுத்தார்...


P/ Thillayadi M.M.V.
புத்தளம் – கொழும்பு பிரதான வீதியருகே, புத்தளம் நகரிலிருந்து தெற்கே 2 KM தூரத்தில் 14 ஏக்கர் பரப்பளவும், 1.05 KM சுற்றளவும் கொண்டு அமைத்துள்ள பிரமாண்டமான நலப்பரப்பு, தில்லையடி முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் மைதானமாகும். இதை சொந்தம் கொண்டாடவும், பங்குபிரிக்கவும் பலர் முனைந்த போதும் தில்லையடி பாடசாலை நலன்விரும்பிகள் மூலம் தடுத்து நிருத்தப்பட்டமை வரலாற்றில் பதியப்பட்ட விடயமாகும். எனினும், ஒரு சில துண்டுகள் பறிபோனதும் கசப்புகுரிய உண்மையாகும்.ஒரே நேரத்தில் சுமார் 3 கிரிக்கெட் போட்டிகளை நடத்த கூடியளவு வசதி கொண்ட இம் மைதானத்தில், தில்லையடியை பொறுத்தளவில், வெள்ளிகிழமைகளில் அதிக மேட்ச்கள் நடத்தப்படுகிறது. அதனால் பாடசாலை மைதானத்தில் சுமார் 150 நபர்களுக்கு மேல் காணப்படுவார்கள். இவர்கள் தண்ணீர் அருந்தவும், ஒய்வு எடுக்கவும் பாடசாலையைப் பயன்படுத்துவர். இதனால் பாடசாலையின் சொத்துகளுக்கு சேதம் ஏற்படுகிறது.
இதனைக் கட்டுபடுத்துவதற்காக பாடசாலை அதிபர், பாடசாலை அபிவிருத்தி குழு- SDS, பாடசாலை பழைய மாணவர் சங்கம் மற்றும் மைதானத்தை பயன்படுத்துவோர் ஆகியோர் நேற்றிரவு (2015.02.15) கலந்துரையாடல் ஒன்றை நடத்தி, மைதானத்தை பயன்படுத்துவோருக்கு ஒரு தனிக்குழு அமைக்கப்பட்டதுடன் பாடசாலைக்கு சந்தாப் பணம் செலுத்த வேண்டும் எனவும் தீர்மானிக்கபட்டது.
P/ Thillayadi M.m.v.

இக் கலந்துரையாடலில் உரையாற்றிய தில்லையடி மு.ம.வி. அதிபர் எஸ்.எம். ஹுதைலீன், 'பாடசாலை மைதானத்தை பாதுகாக்கவேண்டிய பொறுப்பு பாடசாலை அதிபராகிய எனக்கு உள்ளது. பாடசாலை மைதானத்தை துஸ்பிரயோகம் பண்ணுவோரை இனம்கண்டால் என்னிடம் கூறுங்கள்' எனக் கேட்டுக்கொண்டார்.