P/ Thillayadi M.M.V. |
புத்தளம் – கொழும்பு பிரதான வீதியருகே, புத்தளம் நகரிலிருந்து தெற்கே 2 KM தூரத்தில் 14 ஏக்கர் பரப்பளவும், 1.05 KM சுற்றளவும் கொண்டு அமைத்துள்ள பிரமாண்டமான நலப்பரப்பு, தில்லையடி முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் மைதானமாகும். இதை சொந்தம் கொண்டாடவும், பங்குபிரிக்கவும் பலர் முனைந்த போதும் தில்லையடி பாடசாலை நலன்விரும்பிகள் மூலம் தடுத்து நிருத்தப்பட்டமை வரலாற்றில் பதியப்பட்ட விடயமாகும். எனினும், ஒரு சில துண்டுகள் பறிபோனதும் கசப்புகுரிய உண்மையாகும்.ஒரே நேரத்தில் சுமார் 3 கிரிக்கெட் போட்டிகளை நடத்த கூடியளவு வசதி கொண்ட இம் மைதானத்தில், தில்லையடியை பொறுத்தளவில், வெள்ளிகிழமைகளில் அதிக மேட்ச்கள் நடத்தப்படுகிறது. அதனால் பாடசாலை மைதானத்தில் சுமார் 150 நபர்களுக்கு மேல் காணப்படுவார்கள். இவர்கள் தண்ணீர் அருந்தவும், ஒய்வு எடுக்கவும் பாடசாலையைப் பயன்படுத்துவர். இதனால் பாடசாலையின் சொத்துகளுக்கு சேதம் ஏற்படுகிறது.
இதனைக் கட்டுபடுத்துவதற்காக பாடசாலை அதிபர், பாடசாலை அபிவிருத்தி குழு- SDS, பாடசாலை பழைய மாணவர் சங்கம் மற்றும் மைதானத்தை பயன்படுத்துவோர் ஆகியோர் நேற்றிரவு (2015.02.15) கலந்துரையாடல் ஒன்றை நடத்தி, மைதானத்தை பயன்படுத்துவோருக்கு ஒரு தனிக்குழு அமைக்கப்பட்டதுடன் பாடசாலைக்கு சந்தாப் பணம் செலுத்த வேண்டும் எனவும் தீர்மானிக்கபட்டது.

P/ Thillayadi M.m.v. |
இக் கலந்துரையாடலில் உரையாற்றிய தில்லையடி மு.ம.வி. அதிபர் எஸ்.எம். ஹுதைலீன், 'பாடசாலை மைதானத்தை பாதுகாக்கவேண்டிய பொறுப்பு பாடசாலை அதிபராகிய எனக்கு உள்ளது. பாடசாலை மைதானத்தை துஸ்பிரயோகம் பண்ணுவோரை இனம்கண்டால் என்னிடம் கூறுங்கள்' எனக் கேட்டுக்கொண்டார்.
No comments:
Post a Comment